திருமண அழைப்பிதழ்

அன்புடையீர்,
விசுவாவசு வருடம், பங்குனி மாதம் இரண்டாம் நாள் (16-03-2026), திங்கட்கிழமை, திரயோதசி திதியும், அவிட்ட நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய காலை 9:21 மணி முதல் 10:41 மணி வரை உள்ள இடப லக்கின சுப முகூர்த்தத்தில்,

எமது புத்திரன் திருநிறைச்செல்வன்

மருத்துவர். சேயாந்தன் கரன்

அவர்களுக்கும்

கலாநிதி. கரன் ஏரம்பமூர்த்தி
திருமதி. ஞானவாசுகி கரன்

Waterloo, Lower Hutt
New Zealand

எமது புத்திரி
திருநிறைச்செல்வி

செல்வி. கேய்லி றயன்

அவர்களுக்கும்

இறைவன் திருவருள் துணையினால் திருமாங்கல்யதாரணம் நடைபெறப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்தாருடன் வருகை தந்து, மணமக்களை ஆசீர்வதித்து, தொடர்ந்து நடைபெறும் விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

திருமணம் நடைபெறும் இடம்

கோல் பேஸ் ஹோட்டல்,
2 கோல் ரோட்,
கொழும்பு 00300,
இலங்கை.

அன்புடன் தங்கள் நல்வரவை நாடும்

திரு. கீரன் றயன்
திருமதி. றொண்டா றயன்

Ebdentown, Upper Hutt
New Zealand

எப்போது

திங்கட்கிழமை

மார்ச் 16, 2026

காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

எங்கே

கோல் பேஸ் ஹோட்டல்

2 கோல் ரோட்

கொழும்பு 00300, இலங்கை

நிகழ்ச்சி அட்டவணை

பொன்னுருக்கல்

தனியார் நிகழ்ச்சி - இடம் பின்னர் உறுதிப்படுத்தப்படும்
மார்ச் 15 ஆம் தேதி, காலை 09.56 - 11.26 மணிக்கு

இந்த நிகழ்விற்கு மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரு குடும்பங்களிலிருந்தும் நெருங்கிய குடும்பத்தினர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.

திருமணம்

மார்ச் 16 ஆம் தேதி, காலை 9:00 மணிக்கு

தயவுசெய்து சரியான நேரத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விருந்துபசாரம்

மார்ச் 16 ஆம் தேதி, மதியம் 12.00 மணி

அனைத்து உணவுகளும் சுத்தமான சைவமாக இருக்கும். சிறப்பு உணவுக் கோரிக்கைகள் இருப்பின் தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்